நாட்டின் கொவிட் 19 நிலைமையைக் கருத்திற்கொண்டு, முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு கடுமையாக பரிந்துரைப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் ஆலோசனையின் பேரில் சுகாதார அமைச்சு இந்த பரிந்துரையை விடுத்துள்ளது.
இதன்படி, உள்ளக இடங்கள், பொது ஒன்றுகூடல்களில் இருக்கும்போதும், பொதுப்போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தி பயணங்களில் ஈடுபடும்போதும் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
இலங்கையில் கொவிட்19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மாதங்களின் பின்னர் மீண்டும் அதிகரித்து வருகின்றதை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த 10 நாட்களில் நாட்டில் 500 க்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை மாத்திரம் 75 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு கடுமையாக பரிந்துரையை முன்வைத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM