(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காகவும், எதிர்கால போராட்டத்தை இவ்வாறு தான் அடக்குவேன் என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது மிலேட்சத்தனமான தாக்குதலை முன்னெடுத்தார்.
1983ஆம் ஆண்டு கலவரத்தில் விளைவு எந்தளவிற்கு தாக்கம் செலுத்தியது என்பதை ஜனாதிபதி நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
போராட்டகாரர்களின் தன்னெழுச்சி போராட்டத்தினால் தான் பிரதமர் மற்றும் ஜனாதிபதியாகியுள்ளதை ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் மறக்க கூடாது.
ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணித்தியாலத்திற்குள் ஜனநாயகத்திற்கு முரணாக மேற்கொண்ட செயற்பாட்டினால் முழு உலகமும் இலங்கையை கண்டித்துள்ளது.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களை திருப்திப்படுத்துவதற்காகவும், தனக்கு எதிராக எதிர்காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டால் இவ்வாறு தான் அடக்குவேன் என்ற அச்சத்தை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டார்.
அதிகாரத்தை பிரயோகித்து மக்கள் போராட்டத்தை ஒருபோதும் அடக்க முடியாது. 1983ஆம் ஆண்டு கலவரம் எந்தளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மக்கள் போராட்டம் வெகுவிரைவில் தீவிரமடையும்.
போராட்டகாரர்கள், அமுக்க குழுக்கள் ஆகிய தரப்பினரை ஒன்றிணைத்து வெகுவிரையில் புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம். ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காக நாட்டு மக்கள் மீது அடக்கு முறைமைய கட்டவிழ்த்து விடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM