(எம்.மனோசித்ரா)
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த 3 வாரங்களாக மூடப்பட்ட பாடசாலைகள் இன்று திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் மறு அறிவித்தல் வரை வாரத்தில் 3 நாட்கள் மாத்திரமே பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய திங்கள் , செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மாத்திரம் பாடசாலைகளிலும் , புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மெய்நிகர் ஊடாகவும் கற்பித்தலை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆர்ம்பிக்கப்பட்ட போதிலும் , மாணவர்கள் , ஆசிரியர் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினர் இன்றைய தினம் கடும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
தனியார் பேரூந்துகள் சேவைகள் ஈடுபடுத்தப்படும் வீதம் குறைவாகக் காணப்படுகின்றமையால் , அரச பேரூந்துகளை எதிர்பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் நீண்ட நேரம் வீதிகளில் காத்திருக்க வேண்டிய ஏற்பட்டது.
எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் சிக்கல் காரணமாக பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகளும் மிகக் குறைந்தளவிலேயே இன்றைய தினம் சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதால் தாம் மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதில் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக பாடசாலை பேரூந்து சாரதிகள் விசனம் தெரிவித்தனர்.
எனவே பாடசாலை சேவையில் ஈடுபடும் பேரூந்துகளுக்கும் , அதிபர் ஆசிரியர்களுக்கும் எரிபொருளை விநியோகிப்பதற்கு உரிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM