(எம்.எப்.எம்.பஸீர்)

85 ஆவது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று இந்தோனேஷியா நோக்கி பயணமானார். இந் நிலையில் பூஜித் ஜயசுந்தர மீள நாடு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்கு பொறுப்பாக உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சி.டி. விகரமரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.

சர்வதேச பொலிஸ் மாநாடானது நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை வரை இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் சர்வதேசத்தின் 190 பொலிஸ் பிரதானிகள் பங்கேற்கவுள்ளனர். இந் நிலையிலேயே அம்மாநாட்டில் பங்கேற்க பூஜித் ஜயசுந்தர நேற்று அதிகாலை நாட்டில் இருந்து சென்றார்.

இந் நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாடு திரும்பும் வரை பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி. விகரமரத்ன நியமிக்கப்ப்ட்டுள்ளார்.