புதிய ஜனாதிபதியின் தலைமையில் அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவாக ஏற்படுத்துவோம் - விஜேதாச உறுதி

Published By: Digital Desk 4

25 Jul, 2022 | 04:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவாக ஏற்படுத்துவதுடன் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்வோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தாய்லாந்துக்கான இலங்கை தூதுவரிடம் எடுத்துக்கூடியுள்ளார்.

Articles Tagged Under: vijayadasa rajapaksa | Virakesari.lk

இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹான்போல் நீதி, சிறைச்சாலைகள் மற்று்ம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வை  இன்று நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பொருளாதாரம், அரசியல் மற்றும் கலாசார ஒத்துழைப்புகளை மேலும் அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.

புதிய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கையில் அரசியல் ஸ்திரதத்தன்மையை ஏற்படுத்துதல் மற்றும் பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு கொணடுவருவரும் நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும்.

அத்துடன் அரசியலமைப்பின் 22ஆம் திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அனுமதித்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என அமைச்சர் தூதுவருக்கு எடுத்துக்கூறினார்.

அத்துடன் 2016ஆம் ஆண்டும் தாய்லாந்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் விழாவின் பிரதான உரையை ஆற்றுவதற்கு தனக்கு சந்தர்ப்பம் கடைத்தது என்றும் 2017இல் அந்த விழா இலங்கையில் இடம்பெற்றபோது, தாய்லாந்து அதற்காக பாரியளவில் ஒத்துழைப்பை வழங்கியதாவும் அமைச்சர் இதன்போது ஞாபகப்படுத்தினார்.

மேலும் பௌத்த உபசம்பதத்தை மீண்டும் இந்த நாட்டுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பௌத்த மதத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் தற்காலத்தில் இலங்கையில் பொருளாதாரம் மற்றும் மத கலாசார அபிவிருத்திக்காகவும் தாய்லாந்து பெற்றுத்தரும் ஒத்துழைப்பையும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குரிய நிலைமைகள் நிறைவடைந்து பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக ராஜதந்திர ரீதியில் முடியுமான உதவிகளை பெற்றுத்தர தயாராக இருக்கின்றோம் என இதன்போது தாய்லாந்துக்கான தூதுவர் குறிப்பிட்டதாக நீதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15