(பா.ருத்ரகுமார்)

சீன உயர்ஸ்தானிகர் யீ. இக்ஸ்லியாங்கினால் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடன்கொள்கை தொடர்பில் கூறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து இவ்வாரத்துக்குள் தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்தவிடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சீன உயர்ஸ்தானிகரத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின்போது சீன உயர்ஸ்தானிகர் இலங்கையின் தளம்பளான பொருளாதார கொள்கை, மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் சீனாவிற்கு திருப்தியளிக்கவில்லை எனவும் சீனா இலங்கைக்கு அதிக வட்டியில் கடன் கொடுக்குமாயின் மீண்டும் ஏன் இலங்கை அதிகாரிகள் சீனாவிடமிருந்து கடன் பெறுகின்றார்கள் என கூறியிருந்தார்.

அத்தோடு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது அரசாங்கத்தின் கொள்கைகளும் மாறி விடுகின்றது. நிலையான பொருளாதார கொள்கையினை ஒரு நாடு கடைப்பிடித்தால் மட்டுமே அபிவிருத்தியை எதிர்ப்பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சீன உயர்ஸ்தானிகரின் குறித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இலங்கை மற்றும் சீனாவிற்கிடையிலான பொருளாதார அபிவிருத்தி திட்டங்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சு இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இவ்வாரத்துக்குள் தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.