கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை பிடிக்காதமையால் பாடசாலை மாணவி ஒருவர் சக மாணவனை சரமாறியாக தாக்கும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் பரவி வருகின்றது.

குறித்த வீடியோவில் வகுப்பறையில் தனது நண்பர் மற்றும் நண்பிகளுடன் ஒரு மாணவன் அமர்ந்திருக்கின்றார்.

அச்சமயத்தில் அவ்வழியில் ஒரு மாணவி செல்லும் நேரத்தில் தனது கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை குறித்த மாணவன் ஒலிக்கச் செய்ய அம் மாணவி மாணவனின் கன்னத்தில் அரை விட்டு செல்கின்றார்.

மீண்டும் குறித்த மாணவியிற்கு கோபம் வரும் வகையில் அம் மாணவன் தன்னுடைய கையடக்கத்தொலைபேசியின் அழைப்பு ஒலியை ஒலிக்கச் செய்தமையால் கோபமடைந்த குறித்த மாணவி அம் மாணவனை சரமாறியாக தாக்குகின்றார்.

அம் மாணவனுடன் அருகில் இருந்த நண்பர்கள் குறித்த மாணவியினை தடுத்து நிறுத்துகின்றனர்.