உணவுக் குழாய் வால்வு சமச்சீரின்மை பாதிப்பைச் சீராக்க இயலுமா..?

By Digital Desk 5

25 Jul, 2022 | 01:53 PM
image

பெப்டிக் அல்சர் எனப்படும் உணவு குழாய் புண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அவர்களது உணவு குழாயில் ஏற்படும் தளர்ச்சியை அல்லது சமசீரற்ற தன்மையை தான் மருத்துவ மொழியில் Lex Les என குறிப்பிடுவார்கள். இதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்தால் இவற்றிற்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

தொடர் ஏப்பம், நெஞ்சு பாரமாக இருப்பது போன்ற உணர்வு, படபடப்பு, நடு முதுகு வலி, தலைசுற்றல், வயிற்று வலி இது போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுடைய உணவுக் குழாயில் உள்ள வால்வுகள் தளர்ச்சி அடைந்திருக்க கூடும். அதாவது உணவுக் குழாயின் கீழ்ப்பகுதியில் அமைந்திருக்கும் வாவ்வு பகுதியில் ஏற்படும் பாதிப்பு என்றும் குறிப்பிடலாம். இதற்கான சத்திர சிகிச்சையின் போது இந்த வால்வு பகுதியை முழுமையான அளவிற்கு இறுக்கமடைய செய்ய இயலாது. ஏனெனில் இந்த வாழ்வின் பணியானது உணவுப் பொருள்களை உணவு குழாய் வழியாக இரைப்பைக்கு அனுப்புவதும், அதே தருணத்தில் இரைப்பையிலிருந்து உணவை மேல் நோக்கி வராமல் தடுப்பதும் இதன் பணி தான்.

காரமான உணவுகள், துரித உணவுகள், சத்தற்ற உணவுகளை அகால வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், சாப்பிட்டவுடன் குனிந்து வேலை செய்வதாலும்.. இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து அதற்கான நிவாரணத்தை சிகிச்சையாக வழங்குவார்கள். இதன்போது மருத்துவர்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பித்தத்தை அதிகப்படுத்தும் பால்மா பொருட்களை சாப்பிடுவதையும், அருந்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். தேனீர் மற்றும் கோப்பி அருந்துவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். உணவகங்களில் சுவைக்காக சேர்க்கக்கூடிய ரசாயன கலந்த உணவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் பரபரப்பான மனநிலையையும் தவிர்க்க வேண்டும். இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு எனும் ஆறு சுவையையும் குறைந்த அளவில் தொடர்ந்து உணவு முறையாக மாற்றி எடுத்துக் கொண்டு வந்தால் இதிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும்.

டொக்டர் பாரி முத்துக்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right