(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூல வரைபினை நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ 27 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கமைய சட்டமூலத்தின் முதலாம் வாசிப்பு இடம் பெற்று ஒருவார காலத்திற்கு பின்னர் சட்டமூலத்தை எவரும் உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்தாவிடின் பாராளுமன்ற நிலையியல் கோட்பாடுகளுக்கமைய விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு கடந்த மாதம் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து அதனை உறுதிப்படுத்தும் வகையிலான வர்த்தமானி கடந்த மாதம் 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இரட்டை குடியுரிமை உள்ள நபர் இலங்கை பாராளுமன்றில் உறுப்பினராக பதவி வகித்த தகுதியற்றவர் என்ற திருத்தம் 22ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
பிரதமரின் பதவி விலகல் தொடர்பில் 22ஆவது திருத்த வரைபில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பதவி விலகல் தொடர்பில் பிரதமர் உத்தியோகப்பூர்வ கையொப்பத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பல் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதவிடத்து அவர் பிரதமர் பதவியை வகித்த தகுதியற்றவராக கருதப்படுவார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையினை பிரதமர் இழப்பாராயின் அவரை பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்ட மூல வரைபு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை சூட்சமமான முறையில் பலப்படுத்தியுள்ளதே தவிர மட்டுப்படுத்தவில்லை.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஏற்பாடுகள் ஏதும் 22 ஆவது திருத்த வரைபில் உள்வாங்கப்படவில்லை என எதிர்ககட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்த வரைபு மீள ஸ்தாபிக்கப்படும். அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த போது குறிப்பிட்டிருந்தமை கவனித்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM