ஸ்பெய்னில் 34 ஆயிரம் ஏக்கர் காடு தீக்­கி­ரை : ஒப்­பந்­தக்­காரரே காரணம் எனக் கூறுகிறது நெதர்­லாந்து நிறு­வனம்

By Digital Desk 5

25 Jul, 2022 | 10:50 AM
image

ஸ்பெய்னில் 34,000 ஏக்கர் பரப்­ப­ளவு காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்­த­காரர் நிறு­வ­ன­மொன்றே காரணம் என நெதர்­லாந்­தி­லுள்ள சர்­வ­தேச நிறு­வ­ன­மொன்று தெரி­வித்­துள்­ளது.  

லேண்ட் லைப் எனும் இந்­நி­று­வனம், காடு­களை மீள ஸ்தாபிக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. நெதர்­லாந்தை தள­மாகக் கொண்­டுள்­ள­துடன் அமெ­ரிக்கா, ஸ்பெய்ன் ஆகிய நாடு­க­ளிலும் அலு­வ­ல­கங்­களை கொண்­டுள்ள நிறு­வனம் இது.

இந்­நி­லையில், ஸ்பெய்னின்  அராகோன் பிராந்­தி­யத்தில் 34,600 ஏக்கர் (14,000 ஹெக்­டேயர் பரப்­ப­ள­வான காடு தீக்­கி­ரை­யா­ன­மைக்கு தனது ஒப்­பந்த நிறு­வ­ன­மொன்று காரணம் என லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

மழைக்­கா­லத்தில் மரங்­களை நடு­வ­தற்­கான தயார்­ப­டுத்­தல்­க­ளுக்­காக தனது ஒப்­பந்த நிறு­வ­ன­மொன்­றினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட அகழ்வு இயந்­தி­ர­மொன்­றி­லி­ருந்து ஏற்­பட்ட தீப்­பொ­றியே இக்­காட்டுத் தீ பர­வி­ய­தா­கவும்  லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பர­விய இத்தீ வியா­ழக்­கி­ழமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இதற்­கி­டையில் 34,600 ஏக்கர் காடு தீக்­கி­ரை­யா­ன­துடன் அதன் சுற்­றுப்­பு­றங்­க­ளி­லி­ருந்து 17,000 பேர் வெளி­யேற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், மேற்­படி தீப்­ப­ரவல் குறித்து தான் மிகவும் கவ­லை­ய­டை­வ­தா­கவும் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற நேரிட்ட மக்கள் மீது அனு­தாபம் கொண்­டுள்­ள­தா­கவும் லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

தீப்­ப­ரவல் குறித்து அவ­சர சேவைப் பிரி­வுக்கு உட­ன­டி­யாக தகவல் கொடுக்­கப்­பட்­டது  என அந்­நி­று­வுனம் தெரி­வித்­த­துடன், இது குறித்து விசா­ரணை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் அதி­கா­ரி­க­ளுக்கு தான் ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் தெரி­வித்­துள்­ளது.

அதே­வேளை, சம்­பந்­தப்­பட்ட ஒப்­பந்த நிறு­வ­ன­மா­னது அப்­ப­கு­தியில் பணி­யாற்­று­வதில் மிகுந்த அனு­ப­வத்தைக் கொண்­டுள்ள ஸ்பானிய நிறு­வனம் எனவும், உள்ளூர் மற்றும் பிராந்­திய அதி­கா­ரி­களின் அனு­ம­திப்­பத்­தி­ரங்­க­ளையும் கொண்­டுள்­ளது எனவும் லேண்ட் லைப் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே, கடந்த மாதம் அப்­பி­ராந்­தி­யத்தில் 20 ஏக்கர் பரப்­ப­ள­வான காடு அழிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மான தீயை இந்­நி­று­வனம் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக ஸ்பானிய ஊட­கங்கள் குற்றம் சுமத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், ஏற்­கெ­னவே ஒரு சம்­பவம் நடந்த பின்­னரும் அந்­நி­று­வனம் தொடர்ந்து பணி­களை முன்­னெ­டுத்­தமை சரியானதல்ல என ஸ்பெய்னின் புபேய்ர்கா நகர மேயர் கூறியுள்ளார். 

ஸ்பெய்னில் கடும் வெப்பநிலைக்கு மத்தியல் இவ்வருடம் ஏற்பட்ட பல காட்டுத் தீ பரவல்களினால் சுமார் 2 லட்சம் ஹெக்டேயர் பரப்பளவான காடு தீக்கிரையாகியுளள்து.

கடந்த வாரத்தில் மாத்திரம்  80,000 ஹெக்டேயர் காடு தீக்கிரையாகியுள் ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25