பொற்றோரிடமிருந்து பறிக்கப்பட்ட 4 மாத குழந்தையை வீட்டின் கூரையிலிருந்து குரங்கு ஒன்று எறிந்ததால் அக்குழந்தை உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் துங்கா கிராமத்தைச் சேர்ந்த நிர்தேஷ் உபாத்யாய் என்பவர், தனது 3 மாடி வீட்டின் மேல் தளத்தில் தனது மனைவி மற்றும் 4 மாத ஆண் குழந்தையுடன் இருந்தார்.
அப்போது குரங்குக் கூட்டமொன்று அவர்களை சுற்றிவளைத்தது. குரங்குகளை விரட்டுவதற்கு நிர்தேஷ் முயற்சித்தார். எனினும் அம்முயற்சி வெற்றியளிக்காத நிலையில் படிகட்டு வழியாக கீழே இறங்கிச் செல்வதற்கு அக்குடும்பத்தினர் முயற்சித்தனர்.
அப்போது குழந்தையை கையில் வைத்திருந்த நிர்தேஷ் நிலைதடுமாறியதால், குழந்தையை கிழே வைத்தார்.
அவ்வேளையில் நிர்தேஷும் அவரின் மனைவியும் எதிர்பாராத வகையில், குரங்கு ஒன்று குழந்தையை இழுத்துச் சென்றது.
பெற்றோர்கள் சுதாகரிப்பதற்குள் அக்குரங்கு மேற்படி குழந்தையை கூரையிலிருந்து கீழே எறிந்தது.
அவர்கள் குழந்தையை உடனடியாக தூக்கி எடுத்தபோதிலும் அக்குழந்தை ஸ்தலத்திலேயே இறந்துவிட்டது என செய்தி வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தாம் விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM