அரசாங்க அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைப்பது : மேலும் ஒரு மாத காலம் நீடித்து சுற்றுநிருபம்

Published By: Digital Desk 5

25 Jul, 2022 | 09:25 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்க அலுவலகங்களுக்கு ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு, போக்குவரத்து வசதிகளில் நிலவிய  அசௌகரியங்களை  கருத்திற் கொண்டு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த ஜூன் 20 ஆம் திகதி அரசாங்க ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையிலான தீர்மானத்தை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே. மாயாதுன்னே அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருக்கும் நேற்று மீண்டும் அதனை ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் சுற்று நிருபத்தை அனுப்பியுள்ளார்.

மேற்படி சுற்று நிருபத்தை சாதகமாக்கிக் கொண்டு கடமைக்கு வரக்கூடிய அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்காமல் விடுவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அதனூடாக அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க சில தினங்களில் பொது போக்குவரத்து சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும்.

அதனைக் கவனத்திற் கொண்டு ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட முடியாத பொது மக்களுக்கான சேவைகளை தேவையான அதிகாரிகளை கடமைக்கு அழைத்து மேற்கொள்வதற்கு  இந்த சுற்று நிருபம் தடையாக அமையாது என்றும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07