(எம்.வை.எம்.சியாம்)
இன்றையதினத்தை (25) டெங்கு ஒழிப்பு விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது
இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 43,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமானப் பணிகள் இடம்பெறும் வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பொது இடங்களில் நுளம்பு பெருகுவதற்கான இடங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே இந்நாட்களில் டெங்கு கொரோனா மற்றும் இன்புளுவென்சா காய்ச்சலும் பரவுவதால் நோய் அறிகுறிகள் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
24 மணித்தியாலங்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM