வவுனியா வேப்பங்குளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை : 7 பேர் கைது

Published By: Digital Desk 4

24 Jul, 2022 | 09:45 PM
image

K.B.சதீஸ் 

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக  சிக்கினர் | Virakesari.lk

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (23) மாலை முதல் இன்று (24) அதிகாலை வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. வாகன இலக்கதகடுகளின் கடைசி இலக்கமான 0,1,2 ஆகிய இலங்க மோட்டர் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், சொகுசு கார்கள் என்பவற்றுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.  

இந்நிலையில், எரிபொருள் பெறுவதற்கு செல்லுமிடத்தில் வாகனங்கள் கூடியமையால் வரிசையில் நின்றோருக்கும், ஏனையவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அமைதியின்மை நிலவியது. சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிசார் அமைதியின்மை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு 3 வேளையும் வீட்டிலிருந்து...

2025-03-25 11:29:23
news-image

யாழில் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி...

2025-03-25 11:23:33
news-image

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் பொலிஸ்...

2025-03-25 11:14:33
news-image

யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம்...

2025-03-25 11:12:02
news-image

வேட்புமனு தாக்கலின் பின் தேர்தல் விதிமுறை...

2025-03-25 11:05:49
news-image

பிரிவினைவாத புலம்பெயர்ந்தோர் முன்னர் எப்போதும் இல்லாத...

2025-03-25 11:06:05
news-image

மீட்டியாகொடையில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு!

2025-03-25 10:48:17
news-image

நாட்டில் சில பகுதிகளில் எட்டரை மணிநேரம்...

2025-03-25 10:42:16
news-image

'மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சர்வதேசநீதிமன்றத்திற்கு...

2025-03-25 10:47:57
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில்...

2025-03-25 10:23:00
news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 11:18:01
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41