(இராஜதுரை ஹஷான்)
கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டக்களம் அகற்றப்படவில்லை என ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் வன்முறையற்ற வகையில் ஒன்று கூடும் உரிமையினை உறுதிப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு உறுதியளித்தார்.
வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஒன்று கூடியிருந்தவர்களை வெளியேற்றியமை தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பில் சர்வதேச இணக்கப்பாட்டின் 21 ஆவது உறுப்புரை மற்றும் அமைதியான ஒன்று கூடலை குறிப்பிடும் அரசியலமைப்பின் 14(1)(ஆ) அத்தியாயம் ஆகிய இரு விடயங்களையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டார்.
அரச கட்டடங்களுக்கு இடையூறு விளைவிக்கவும் மற்றும் அரச சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக இடையூறு விளைவிக்க போராட்டகாரர்களுக்கு அனுமதி வழங்க கூடாது என அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஜனாதிபதி அதனை தெளிவுபடுத்தினார்.
சொத்துக்கள் மற்றும் உயிருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகருக்குள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்குவதை உறுதிப்படுத்துவம் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் இராஜதாந்திரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டது.
விகாரமாதேவி பூங்கா, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் மைதானம் ஆகியவற்றில் சகல வசதிகளுடன் அமைதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
கோட்டா கோ கம போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி பொய்யானது, பாதுகாப்பு படையினரால் போராட்டகளம் அகற்றப்படவில்லை என இச்சந்திப்பின் போது குறிப்பிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM