(எம்.வை.எம்.சியாம்)
பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மக்களுக்கு இந்திய தமிழக அரசின் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிவாரண பொருட்கள் அடங்கிய இறுதிப் கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதுதாகவும் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்கள் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்களுக்கு நன்றிதெரிவிப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரால் இலங்கைக்கு உலர் உணவு பொருட்கள் பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டு வந்தன
இந்நிலையில் இது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய மக்களுக்கு இந்த உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்கமைவாக, மொத்தமாக இதுவரையில் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 102 மெற்றிக்தொன் மருந்து பொருட்கள் மற்றும் 500 மெற்றிக்தொன் பால் பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது.
அதன்படி, இலங்கையில் இதுவரையில் 23 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை இலங்கை முழுவதும் உள்ள 25 மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன
தமிழக அரசினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்களை ஏற்றிய இறுதி கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தது. அதனையும் ஏற்கனவே நிவாரணப் பொருட்கள் பெற்று கொடுக்கப்படாத வறிய குடும்பங்களுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் அடிப்படையில் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம் நிறைவடைந்துள்ளது.
அதன் அடிப்படையில் நாம் இலங்கை மக்கள் சார்பில் இந்திய தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM