(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு - கோட்டை ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகள் இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ளது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்களால், ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயில் (கேட் சீரோ) மறிக்கப்பட்டு ஆர்ப்பட்டம் செய்யப்பட்ட நிலையில், செயலக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி கொழும்பில் திரண்ட இலட்சக்காணக்கான மக்களால் ஜனாதிபதி செயலகம் கைப்பற்றப்பட்டதை அடுத்து அச்செயலகத்தின் நடவடிக்கைகல் முற்றாக செயலிழந்தன.
இந் நிலையில் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயுதப் படையினர், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கி துரத்தி, செயலகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந் நிலையில் செயலகத்தின் சேதமாக்கப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள் 24 ஆம் திகதி நண்பகலகும் போது புனரமைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
24 ஆம் திகதி பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் விக்கும் லியனகேயும் ஜனாதிபதி செயலகத்துக்கு சென்று, அதன் பாதுகபபு நிலவரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நேரில் உறுதி செய்துள்ளனர். இந் நிலையிலேயே இன்று முதல் செயலக நடவடிக்கைகள் வழமை போல நடை பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM