பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

24 Jul, 2022 | 04:58 PM
image

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் 37 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

`மாவத்தகம துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி ; ஏழு பேர் கைது | Virakesari.lk

முறைப்பாட்டின் பேரில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேக நபர் கத்தியால் குத்திய சம்பவம் பிடிகல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

பின்னர், பிடிகல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு உதவச் சென்றதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சந்தேக நபர் பொலிஸ் குழுவினரை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டதுடன் கைக்குண்டு போன்ற பொருளை பொலிஸ் குழு மீது வீச முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்காப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது காயமடைந்த சந்தேக நபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சந்தேக நபர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமை...

2025-06-24 13:28:48
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய கனடாவுக்கு விஜயம்

2025-06-24 13:24:21
news-image

இலங்கையின் பொருளாதார மீட்பில் சமூக உரையாடலின்...

2025-06-24 13:18:41
news-image

லுணுகலையில் தங்க நகை திருட்டு -...

2025-06-24 12:45:25
news-image

முன்னணி நரம்பியல் வைத்திய நிபுணர் உட்பட...

2025-06-24 12:55:54
news-image

யாழ். மாவட்ட அரச அதிபராக கடமைகளை...

2025-06-24 12:59:38
news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15