‘டீ கப்’ செடி

By Digital Desk 5

24 Jul, 2022 | 04:47 PM
image

தற்போதைய நெருக்கடியான வாழ்வியலில் இறுக்கமான மனநிலையை தவிர்ப்பதற்கு செடி வளர்ப்பது சிறந்ததொரு தீர்வாகும்.

சுரி செடி வளர்க்கலாம் இடவசதி இல்லையே என்கிறீர்களா?

கவலை வேண்டாம்… வீட்டினுள்ளேயே குளிர்ச்சியை கொண்டுவரும் முறையாக இப்போது பலரது பழக்கத்துக்கு வந்ததுதான் ‘டீ கப்’ இல் செடி வளர்க்கும் முறை.

இது தோட்டகலை வழி வந்த ஒரு செடி வளர்ப்பு முறையாகும்.

இதற்கு அதிகளவான தண்ணீர் அவசியமில்லை. வைலட் ஸ்பிரிங், பீகஸ் மற்றும் கள்ளி வகை செடிகளை ‘டீ கப்’ இல் வளர்ப்பது இலகுவானது. 

இவ்வாறு புதிதாக துளிர்த்த, பசுமையான செடியைப் பார்க்கும்போது நமக்குள் நேர்மறையான உணர்வு எழும். 

இந்த ‘டீ கப்’ செடி வளர்ப்பு முறையில் பீங்கான், கண்ணாடி மற்றும் மூங்கில் போன்றவற்றால் தயாரித்த ‘டீ கப்’களைப் பயன்படுத்தலாம். இவற்றுக்கு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் ‘டீ கப்’களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நன்று.

 

இந்த முறையில் செடிகளை நடுவதும், பராமரிப்பதும் எளிது. ‘டீ கப்’ செடிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகர்த்துவது சுலபமானது. 

வீட்டில் எந்த அறையிலும் இந்த முறையில் தோட்டத்தை உருவாக்கலாம். அலுவலகத்திலும் கூட ‘டீ கப்’ செடி வளர்ப்பை மேற்கொள்ளலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right