யாழ்ப்பாணத்தில்  பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நட்டஈடு பெற்றுக்கொடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவனான சுலக்ஷனின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தாரை சந்தித்த போது எதிர்க்கட்சி தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மாவை சேனாதிராஜாவை தொடர்புக்கொள்ளுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணை ஒருபக்கம் இடம்பெற்றுக்கொண்டிருக்க, குடும்பத்தாருக்கான நட்டஈட்டினை ஜனாதிபதியிடம் தொடர்புக்கொண்டு விரைவில் பெற்றுத்தருவதாக இதன் போது எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர்களின் குடும்பத்தைச் சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவனும் சம்பந்தனுடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.