ப்ளு பேபி தாமதம் வேண்டாம் !

By Digital Desk 5

24 Jul, 2022 | 05:01 PM
image

பிரசவம் பெண்களுக்கு மறுபிறவி. குழந்தையை பார்த்தவுடன் பெண்கள் பிறவிப் பயனை அடைந்துவிடுவார்கள். அப்படி பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை. அதுவே நீல நிறமாக மாறிவிட்டால், அது இதயக் குறைபாடுடைய குழந்தை என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம்.

குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது, குழந்தை நீல நிறமாக மாறும் ப்ளு பேபி சிண்ட்ரோம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரையுள்ள பச்சிளங் குழந்தைகளுக்கே இந்த நோய் பாதிக்கிறது. 

உடலில் ஒட்சிசன் அளவு குறைந்து கார்பன் டை அக்ஸைட் அதிகமானால், உடல் நீல நிறமாகிவிடும். இது இதய மருத்துவத்தில் ~radhl;bf;| எனப்படும். இதுபோன்ற குழந்தைகள் ப்ளு பேபி என்று அழைக்கப்படுவர். 

இதயத்தில் குறைபாடு இருந்தால் இத்தகைய பாதிப்பு வரும். இதயத்தில் ஒட்டையுடன் உள்ள குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சிகிச்சை மூலம் எளிதில் காப்பாற்றலாம். சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ் எனப்படும் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் நீல நிறத்தில் மாறிவிடும். 

இதயத்துக்கு வரும் அசுத்த இரத்தத்தை சுத்தப்படுத்தி, அதனை பிற பகுதிகளுக்கு பம்ப் செய்து அனுப்புவது இதயத்தின் வேலை. இதில் கோளாறு ஏற்பட்டால்தான் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறும். 

காரணம் 

மரபணுக் குறைபாடு, பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இது தாக்கும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பமாக இருக்கும்போது அதிகளவில் மாத்திரை சாப்பிட்டாலும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும், குழந்தையை பாதிக்கும். ரூபெல்லா தடுப்பூசி போடாமல் விடுவதும் குழந்தையை பாதிக்கும். 

இதயத்தில் பாதிப்பு அறிகுறிகள் 

இதயத்துடிப்பில் வித்தியாசமான ஒலி, அடிக்கடி சளி பிடிப்பது, நிமோனியா தாக்குவது, எடை குறைவாக இருப்பது, குறைவாக பால் குடிப்பது, அடிக்கடி மயக்கம், நினைவிழத்தல், கை, கால் வீக்கம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் குழந்தைகளை அழைத்துச்செல்வது அவசியம். 

தடுப்பது எப்படி?

மரபணு குறைபாடு இருக்கிறதா என்று முதலிலேயே பரிசோதனை செய்துகொள்வது நல்லது. கர்ப்பிணிகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தால் முறையாக சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைகள் தாய்ப்பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அதிக வியர்வை ஏற்பட்டாலோ இதய சிகிச்சை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். 

குழந்தையை காப்பாற்றலாம் 

கருவிலேயே குழந்தையின் இதய குறைபாடு கண்டறியப்பட்டால் அதை கலைக்கவே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதேவேளை   பிறந்த பின்னர் இந்தக் குறைபாடு கண்டறியப்பட்டால், அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றலாம். பரிசோதனை மூலம் குழந்தையின் இதய குறைபாட்டினை அறிந்துகொண்டு சிகிச்சையை தொடங்கலாம். எனவே நீல நிற பேபி என்றாலும் கவலை வேண்டாம். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right