வயதானவர்களும் எளிதான வேலைகள் செய்யலாம்!

By Digital Desk 5

24 Jul, 2022 | 05:05 PM
image

வயதான பெண்கள் எளிதான வீட்டு வேலைகளைச் செய்வது இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

வயதாகும்போது சாதாரணமாகவே உடல் உழைப்பு குறைந்து விடுகிறது. உறுப்புகள் வேலை செய்வது குறைந்து விடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. சிலருக்கு இதனால் மன அழுத்தமும் ஏற்படுகிறது.

பெரும்பாலாக வயதானவர்கள் ஓய்வில் இருப்பதால் பலவற்றை பற்றி சிந்திக்கின்றனர். இதன் காரணமாகவும் உடலும் மனமும் பாதிக்கப்படலாம்.

உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைக்க சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. ஆனால் பெண்களுக்கு ஓர் எளிய வழி இருக்கிறது. வீட்டைப் பராமரிக்கும் வேலை செய்தாலே போதும் உடல்நலக்; குறைவு ஏற்படாது. இதய பாதிப்பு ஏற்படுவது குறைவு என்று ஆய்வொன்று கூறுகிறது.

பெண்கள் தோட்டக்கலை, சமையல், வீட்டை அழகுபடுத்துவது, தன்னை அழகு படுத்திக்கொள்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் அவர்களது  மன நலன் மேம்படுகிறது என்றும் இதனால் அவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

‘ஜர்னல் ஒஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான பல நிறுவனக் குழு இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் வீட்டில் அன்றாட வேலையில் ஈடுபடும் பெண்களுக்கு இதய நோய்க்கான ஆபத்து 43 சதவீதம் குறைவு. கரோனரி இதய நோய்க்கான ஆபத்து 43 சதவீதம் குறைவு. பக்கவாதம் நோய்க்கான ஆபத்து 30 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதய நோய் இறப்புக்கான ஆபத்து 62 சதவீதம் குறைவாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

‘வயதானவர்களுக்கு லேசான உடல் இயக்கம் போதுமானது. அவர்கள் தீவிரமாக ஓட்டம், நடைப்பயிற்சி செய்ய வேண்டிய தேவையில்லை. உடலுக்கும் மனதுக்கும் திருப்தி தருகிற சில வேலைகளில் ஈடுபட்டால் போதுமானது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right