சண்டே டைம்ஸ்
விக்கிரமசிங்க 52 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றமை பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாதகமானவிதத்தில் நிலைமை காணப்படுகின்றது என பலர் கருதும் நிலை காணப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிற்குள் நெருக்கடியை உருவாக்கியதன் மூலம் அதிலிருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட இரு முன்னாள் அமைச்சர்களான உதயகம்மன்பிலவும் விமல்வீரவன்சவும் ரணில்விக்கிரமசிங்கவிற்கு எதிரான பிரச்சாரத்தில் முன்னணியில் காணப்பட்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பின்னால் உள்ள கொள்கை வகுப்பாளரும் மூலோபாய வகுப்பாளருமான பசில் ராஜபக்ச - அவர் அரசியல்ரீதியில் அவமானகரமான வீழ்;ச்சியை சந்தித்த போதிலும் இதனது உதவியாளர்கள் சிலரின் ஆதரவுடன் ரணிலின் வெற்றிக்கான நடவடிக்கைகளிற்கு தலைமை தாங்கினார்.
13ம் திகதி இலங்கையிலிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய குடிவரவு குடியகல்வு பிரிவு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காததால் வெளியேறும் முயற்சிகள் முறியடிக்கப்பட்ட பசில் ராஜபக்சவின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவர் குறித்த தனிப்பட்ட விபரங்களும் காணப்பட்டன.
அவர் ஒவ்வொரு தனிநபரினது விருப்பு வெறுப்புகளையும் அறிந்துகொண்டார்.
ஒவ்வொரு தனிநபர்களிற்கும் ஏற்ற விதத்தில் அணுகியமையே பலனளித்தது என விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் அனைத்து நாடளுமன்ற உறுப்பினர்களுடனும் தொலைபேசியில் பேசினார்.
அவரது மகன் நாமல் ராஜபக்ச அவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து ரணில்விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்ககொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க சுலபமாக வெற்றி பெற்றதும் அன்றிரவு அந்த வெற்றியை கொண்டாட நாமல் ராஜபக்ச விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்தார்.
பிரதமர் அலுவலகத்தில் தினேஸ் குணவர்த்தன பிரதமராக பதவியேற்கும்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாமல் ராஜபக்ச கலந்துகொண்டார்.
ஹரீன்பெர்ணான்டோ மனுசநாணயக்கார இருவரை தவிர இதுவரை பதவியேற்ற அமைச்சர்கள் அனைவரும் ஆளும் கூட்டணியை சேர்ந்தவர்கள் என்பதால் அரசாங்கத்தில் ராஜபக்சவின் செல்வாக்கே மேலோங்கியுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்று பரந்துபட்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கும் வரை இந்த நிலையையே நீடிக்கலாம்.
எனினும் அவ்வாறான பொறிமுறையால் ராஜபக்சாக்களிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படலாம்.கோத்தபாய ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்தமை ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி செய்யப்பட்டமையே ஆளும் கூட்;டணிக்கான அரசியல்கட்டமைப்பில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களிற்கு காரணம்.
ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை ராஜபக்ச குடும்பம் கொண்டாடுவதற்கான காரணம் குறிப்பிடத்தக்கதாக காணப்படுகின்றது.டலஸ் அலகப்பெரும ஜனாதிபதியானால் என்ன நடக்கும் என அவர்கள் அச்சம் கொண்டிருந்தமையே அதற்கு காரணம் .
அரசாங்க நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு டலஸ் அலகப்பெருமவின் பெயர் முன்மொழியப்பட்டதை தொடர்ந்து ராஜபக்ச குடும்பத்தினருக்கும் அவருக்கும இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
தற்போது ஸ்ரீலங்காபொதுஜனபெரமுனவுடன் இல்லாத ராஜபக்சாக்களை எதிர்க்கும் குழுவினரே டலஸ் அலகப்பெருமவை பிரதமராக்கும் யோசனைக்கு ஆதரவளித்திருந்தனர்.அவர்கள் இன்னமும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளின் போதும் ராஜபக்ச எதிர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அலகப்பெருமவிற்கு ஆதரவளித்தனர்.
நிலைமை தீவிரமடைந்ததை தொடர்ந்து பசில் ராஜபக்ச தலையிட்டார்.தனது ஆதரவளாரான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பொதுச்செயலாளர் சாகர காரியவாசத்திடம் கட்சி ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என அறிக்கையொன்றை வெளியிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்இதற்கு கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் உடனடியாக கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM