மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்;ட இருநூறுவில், பாவக்கொடிசேனை பிரதேசத்தில் மிசாரம் தாக்கி முதியவர் ஒருவர் இன்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொவிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (71) வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், நண்பர் ஒருவரின் தோட்ட வளாகம், மாடு, ஆடுகளை பராமரித்துக்கொண்டு வருவதாகவும் தோட்டத்தினை பாதுகாக்கும் பொருட்டு யானைகளுக்கு வைக்கப்பட்டிருந்த மீன்சார வேலியில் சிக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் சம்பவத்தை கண்ட கிராமவாசி ஒருவர் பொலிஸாருக்கு தெரிவித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார் பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM