புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஏழாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் யுஎல் 195 விமானத்தினூடாக இந்தியா பயணமானார்.

புதுடெல்லியை சென்றடையும் அவர், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ நிலையத்தில் மாநாடு நாளை நடைபெறும் இந்த மாநாட்டை உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 22 மாதங்களில், புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.