இரவுநேரத் தாக்குதல்களுக்கு அஞ்சோம் : மீண்டும் ஒன்றிணைவோம் - 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் சூளுரை

24 Jul, 2022 | 07:40 AM
image

(நா.தனுஜா)

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதலைத் தொடர்ந்து நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன், ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில் தொடர்ந்தும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

 

இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும் வரை போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதியிலிருந்த போராட்டக்காரர்கள் சிலர் வீரகேசரியிடம் தெரிவித்தனர்.

 தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து நாட்டுமக்கள் ஒன்றிணைந்து சுமார் 100 நாட்களுக்கும் மேலாக முன்னெடுத்துவந்த தன்னெழுச்சிப்போராட்ட இடமான கொழும்பு, காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை பெருமளவான பொலிஸார், முப்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், அங்கிருந்த போராட்டக்காரர்கள்மீதும் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல் நடாத்தப்பட்டு, கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் ஜனாதிபதி செயலகமும் படையினரால் கைப்பற்றப்பட்டது.

 ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வெளியேறுவதுடன் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தைக் கலைப்பதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடுவதற்குப் போராட்டக்காரர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்த நிலையில், நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் மேற்கொண்டு 24 மணிநேரம் கூட முடிவடைந்திருக்காத பின்னணியில படையினரின் இரும்புக்கரங்கொண்டு மக்களின் போராட்டம் அடக்கப்பட்டமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்திருந்தது.

 அதுமாத்திரமன்றி ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லக்கூடிய அனைத்து வீதிகளும் பாதுகாப்புப்படையினரால் முடக்கப்பட்டதுடன் ஊடகவியலாளர்களுக்கும் அப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று சனிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தைச்சூழ பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக அப்பகுதிக்குள் நுழைய முடியாதவாறு மறியல்கள் இடப்பட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதுடன் அங்கிருந்த கூடாரங்களில் சொற்பளவானோரையே காணக்கூடியதாக இருந்தது. 

இருப்பினும் இரவோடிரவாக நடாத்தப்படும் தாக்குதல்களுக்குத் தாம் அஞ்சப்போவதில்லை என்றும், இந்தப் போராட்டத்தில் இடைவெளியோ அல்லது தடங்கலோ ஏற்பட்டாலும் தமது இலக்கை அடையும்வரை போராட்டம் தொடரும் என்றும் அங்கிருந்த போராட்டக்காரர்கள் சிலர் வீரகேசரியிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09