நீதிமன்ற உத்தரவுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை - எம்.ஏ.சுமந்திரன்

Published By: Digital Desk 3

23 Jul, 2022 | 03:15 PM
image

நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

ஜே.ஆர். ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1983 ஜூலைக் கலவரம் ஏற்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜூலை மாதத்தில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் உறவினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது நேற்றைய தினம் காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருக்கிறது. 

போராட்டகாரர்கள் நேற்றைய தினத்தில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

பண்டாரநாயக்க சிலையை சுற்றி 50 மீற்றர் தூரத்திற்கு ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரை போகக்கூடாது என்பதே நீதிமன்ற உத்தரவு. நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் தொடர்பில்லை.

பண்டாரநாயக்க சிலைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையே அதிகதூரம் உள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தை மீள கையளிப்பதாக போராட்டகாரர்கள் சொன்ன பிறகு இந்த தாக்குதல் அரச படையினரால் இருட்டில் மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சமூகம் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது. இவ்வாறான சம்பவம் இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமெட்டோமென ஐனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு நேரே சொன்னார். 

கடந்த மே 9 தாக்குதல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தாக்குதல் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது. மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை கண்டிக்கவில்லை. 

ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது. நேற்றைய தாக்குதல் நாட்டை  பின்னடைய செய்துவிட்டது.

பாசிச அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58