எரிபொருள் வரிசையில் மேலும் இரு மரணங்கள்

Published By: T. Saranya

23 Jul, 2022 | 02:44 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதியில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (22) அவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்துகம

மத்துகம பெலவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர்  திடீர் சுகயீனமுற்ற நிலையில் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வல்லல்விட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவராவார்.

கிண்ணியா

திருகோணமலை-கிண்ணியா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார்சைக்களுக்கு எரிபொருள் பெற்று கொள்ள வரிசையில் காத்திருந்தவர் திடீர் உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் தனது மோட்டார்சைக்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போது  உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்தவர் 59 வயதுடைய ஒருவராவார்.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18