ரஷ்ய படைகளின் ஏவுகணை தாக்குதலில் 300 உக்ரைன் வீரர்கள் பலி

Published By: Digital Desk 5

23 Jul, 2022 | 10:15 AM
image

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்குள்ள நகரங்கள் மீது தொடர்ந்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் டொனட்ஸ்க் மாகாணம் கிராமடோர்ஸ்கி நகரில் உள்ள ஒரு பாடசாலையில், உக்ரைன் இராணுவ வீரர்கள் தங்கி இருந்தனர். அந்த பாடசாலை மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. பாடசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதை உக்ரைன் உறுதிப்படுத்திய வேளையில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தது.

300 வீரர்கள் பலியானதாக ரஷ்ய இராணுவம் கூறியதற்கு உக்ரைன் தரப்பு விளக்கம் அளிக்கவில்லை.

இதற்கிடையே உக்ரைனின் 2 ஆவது பெரிய நகரமான கார்கிவ்வில் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இதில் 3 பேர் பலியானார்கள். 23 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மேலும் ஆயுத உதவிகளை வழங்குகின்றன. உக்ரைன் இராணுவத்துக்கு ஏவுகணைகள், டிரோன் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை அமெரிக்கா வழங்க உள்ளது.

அதேபோல் உக்ரைனுக்கு மேலும் 100 டிரோன்களையும், பீரங்கி தடுப்பு ஆயுதங்களையும் இங்கிலாந்து அனுப்பி வைத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33
news-image

ஜிம்மி கார்ட்டரின் இறுதி நிகழ்வில் அமெரிக்காவின்...

2025-01-10 11:26:47