எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு கடும் மழை தொடரும் பட்சத்தில் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதன்படி  இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த அவதானம் விடுக்கப்படுள்ளது.

இதுதொடர்பில்,  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள குறித்த மாவட்டங்களில் மலை சார்ந்த  பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் தேசிய கட்டட ஆய்வு  மையம்  குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் கடும் மழை நிலவிய போதும், பாரிய அனர்த்தங்கள் தொடர்பாக  அறிவிக்கப்படவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும்,  ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பதாக  அனர்த்த முகாமைத்துவ  நிலையம் தெரிவித்துள்ளது.