உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப் : 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான 2 ஆவது திறன்காண் சுற்றில் இலங்கை வீராங்கனை கயன்திகாவுக்கு 29 ஆவது இடம் 

Published By: Digital Desk 5

23 Jul, 2022 | 09:52 AM
image

(என்.வீ.ஏ.)

ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொன், ஹேவோரட் பீல்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலக மெய்வல்லுநர் சம்பயின்ஷிப்பில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான 2ஆவது திறன்காண் சுற்றில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை கயன்திகா 5ஆம் இடத்தைப் பெற்றார்.

அவர் போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 02.78 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இந்தப் போட்டியில் பங்குபற்றிய 7 பேரில் கயன்திகாவைத் தவிர மற்றைய 6 பேரும் அரை இறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றது விசேட அம்சமாகும்.

அப் போட்டியின் 600 மீற்றர்கள் நிறைவில் அவுஸ்திரேலியாவின்  கெட்ரியோனா பிசெட்(1:29.55) இரண்டாம் இடத்திலும், இத்தாலியின் எலினா பெல்லோ (1:29.55) மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.

ஆனால், அடுத்த 100 மிற்றரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  கீழே தள்ளப்பட்ட  அவுஸ்திரேலிய வீராங்கனை சில செக்கன்களின் பின்னர் மிண்டும் எழுந்து ஓடி 700ஆவது மீற்றரை கடைசியாக நிறைவு செய்தார்.

700 மீற்றர் நிறைவில் பிரித்தானியாவின் கீலி ஹொஜ்கின்சன் (1:45.02) முதலிடத்திலும் இத்தாலி வீராங்கனை எலினா பெல்லோ (1:45.02) இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.

கடைசி 100 மீற்றரில் ஏற்பட்ட நெரிசலில் கீழே தள்ளப்பட்ட இத்தாலி வீராங்கனை 800 மீற்றரை 2 நிமிடங்கள், 02.78 செக்கன்களில் நிறைவு செய்து 7ஆம் இடத்தைப் பெற்றார்.

அவுஸ்திரேலிய வீராங்கனை கடைசி இடத்தை (2:22.25 செக்.) பெறறார்.

இதனைத் தொடர்ந்து இத்தாலி மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த போட்டி தீர்ப்பாளர்கள், அந்த இரண்டு விராங்கனைகளுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து அரை இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதி உடையவர்கள் என தமது முடிவை அறிவித்தனர்.

இவர்கள் இருவரும் 6 திறன்காண் போட்டி முடிவுகளில் நேரப் பெறுதிகளின் பிரகாரம் முறையே 34ஆவது இடத்தையும் 45ஆவது கடைசி இடத்தையும் பெற்றனர்.

இரண்டாவது திறன்காண் போட்டியில் முதல் 3 இடங்களைப் பெற்ற பிரித்தானியாவின் கீலி ஹொஜ்கின்சன் (2:00.88), ஸ்லோவேனியாவின் அனிட்டா ஹோர்விட் (2:01.48), சுவிட்சர்லாந்தின் லோரி ஹொவ்மான் (2:01.63) ஆகியோர் நேரடியாக அரை இறுதிக்கு தகுதிபெற்றதுடன் 4ஆம் இடத்தைப் பெற்ற ஜேர்மனியின் கிறிஸ்டினா ஹெரிங் (2:01,63) சிறந்த நேரப் பெறுதியுடன் அரை இறுதிக்கு முன்னேறினார்.

கயன்திகா ஒட்டுமொத்த நிலையில் 29ஆவது இடத்தைப் பெற்றபொதிலும் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்