போராட்டக்களத்தில் கைதுதான சட்டத்தரணி போப்பகே உள்ளிட்ட 9 பேருக்கு பிணை - இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 

Published By: Digital Desk 4

22 Jul, 2022 | 09:04 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் தங்கியிருந்தோர் தொடர்பில், இன்று (22) அதிகாலை  பாதுகாப்பு தரப்பு முன்னெடுத்த  நடவடிக்கையின் இடையே கைது செய்யப்பட்ட சட்டத்தரணி நுவன் போப்பகே உள்ளிட்ட 9 பேரையும் பிணையில் விடுவித்து கோட்டை நீதிமன்றம்  உத்தரவிட்டது. 

குறித்த 9 பேரில் இருவர் பாதுகாப்பு தரப்பினரின் தாக்குதலால் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் நிலையில், ஏனைய 7 பேரும் இன்று மாலை கோட்டை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போதே அவர்களை தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

அத்துடன்   ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் சந்தேக நபர்கள் நுழையக் கூடாது எனவும் நீதிவான் நிபந்தனை விதித்தார்.

 சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்து முறைப்பாட்டாளர் தரப்பில் கொழும்பு மத்தி  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ்,  உதவி பொலிஸ் அத்தியட்சர் வில்லவ ஆரச்சி,  கோட்டை பொறுப்பதிகாரி சாகர லியனகே ஆகியோருடன் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜரானார். 

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட விரோத கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்து அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அழுத்தம் பிரயோகித்தமை மற்றும் பொதுச் சொத்தான ஜனாதிபதி செயலகத்துக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாக பிரதி சொலிஸ்ட்டர் ஜெனரல் ஜனக பண்டார குறிப்பிட்டதுடன், விசாரணைகள் தொடரும் நிலையில் பிணை வழங்க எதிர்ப்பு முன் வைப்பதாகவும் குறிப்பிட்டார்.

 எனினும் சந்தேக நபர்களுக்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரியன்சி அர்சகுலரத்ன,  சரத் ஜயமான்ன, உபுல் ஜயசூரிய, சாலிய பீரிஸ், சிரேஷ்ட சட்டத்தரணிகளான தர்ஷன குறுப்பு,  குனரத்ன வன்னிநாயக்க உள்ளிட்ட 320 சட்டத்தரணிகள்  ஆஜராகினர்.

அவர்கள் இவ்வழக்கு சோடிக்கப்பட்டது எனவும் சந்தேக நபர்களுக்கும் குற்றச்சாட்டுக்களும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டதுடன், சந்தேக நபர்களை தாக்கியமை தொடர்பில் விசாரணை வேண்டும் என கோரினர்.

 தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள், தாக்குதல் நடாத்தியவர்களை கைது செய்வதை விடுத்து பாதிக்கப்பட்டவர்களை சந்தேக நபர்களாக நிறுத்தியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

 இந் நிலையில் விடயங்களை ஆராய்ந்த கோட்டை பதில் நீதிவான் ஜயந்த டயஸ் நாணயக்கார,  சந்தேக நபர்கள் அனைவரையும் பிணையில் விடுவித்து வழக்கை எதிர்வரும், 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் மீட்புப் பொலிஸாரை வாளினால் மிரட்டியவர்...

2025-11-14 03:19:35
news-image

சாதாரண குடும்ப உணவுக் கட்டணம் ஒரு...

2025-11-14 03:12:58
news-image

சபரிமலை யாத்திரையை புனித யாத்திரையாக அறிவித்து...

2025-11-14 03:06:44
news-image

நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு மீள் சுழற்சியால்...

2025-11-14 02:55:42
news-image

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி; 25...

2025-11-14 02:48:24
news-image

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக்...

2025-11-14 01:51:35
news-image

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு...

2025-11-14 01:46:01
news-image

வட–கிழக்கில் போதைப்பொருள் ஒழிக்க இராணுவத்தை அகற்ற...

2025-11-14 01:43:00
news-image

2026 வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...

2025-11-14 01:40:52
news-image

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்க்கட்சித்...

2025-11-14 01:01:49
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட...

2025-11-14 00:51:47
news-image

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 840...

2025-11-14 00:46:43