வீரகேசரி நலன்புரிச் சங்கத்தால் இன்று நடத்தப்படவிருந்த எக்ஸ்பிரஸ் பிரிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ( EPL) மழைக் காரணமான தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

வீரகேசரி நலன்புரி சங்கத்தின் கிரிக்கெட் திருவிழா - 2016 க்கான சுற்றுப் போட்டிகள் கொழும்பு -14 கிராண்ட்பாஸ் புனித சூசையப்பர் ஆண்கள் பாடசாலை மைதானத்தில் இன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

சீரற்ற காலநிலையால் குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ள நிலையில் போட்டி நடைப்பெறும் தினம் விரைவில் அறிவிக்கப்படும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.