ராஜபக்ஷாக்களின் நிழல் அரசாங்கம் நிராயுதாபணிகள் மீது அரச பயங்கரவாதத்தை பிரயோகித்துள்ளது - சஜித் 

By Digital Desk 5

22 Jul, 2022 | 05:01 PM
image

(எம்.மனோசித்ரா)

நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷாக்களின் நிழல் அரசாங்கம் அரச பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி மிலேச்சதனமான தாக்குதலைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய வர்கள் சுயாதீன விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , இது தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் (22) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுனையில் ,

நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராஜபக்ஷாக்களின் நிழல் அரசாங்கம்  அரச பயங்கரவாததத்தைப் பயன்படத்தி மிலேச்சதனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் நாட்டில் சிறந்த அபிவிருத்தி ஏற்படும் என்று நாம் எதிர்பார்த்தோம்.

ஆனால் புதிய ஜனாதிபதியின் முதலாவது செயல்பாடாக அரச பயங்கரவாதம் , மிலேசத்தனமான வன்முறை என்பனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நிராயுதபாணிகளான சிவில் பிரஜைகள் ,  பெண்கள் , அங்கவீனமுற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மேலும் பலர் மீது பாரிய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த தாக்குதல்களை அனைத்து எதிர்கட்சிகளில் சார்பிலும் நாம் கடுமையாக கண்டிக்கின்றோம்.  இந்த மிலேச்சதனமான தாக்குதல்களுக்கு இடமளித்த அனைவரையும் சுயாதீன விசாரணைகளுக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது இந்த அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இந்த பொறுப்பில் இருந்து ஜனாதிபதியால் விலக முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கு அவர் பொறுப்பு கூற வேண்டும். 

இந்த மிலேச்சதனமான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு யார் அனுமதி அளித்தது ? யாருடைய ஒத்துழைப்புடன் இந்த அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டது ?

உள்நாட்டு , வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதா சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள உத்தி என்பதை அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றோம்.  இது தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானதாகும்.  அதேபோன்று மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் . அத்தோடு அதை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும்.

நாட்டின் எதிர்காலம் ஜனநாயகமாகும் என்பதை அரசாங்கத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இந்த ஜனநாயகத்திற்குள் மக்களின் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும். வன்முறை இன்றி இந்த உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

அதேபோன்று மக்களும் இந்த உரிமைகளை பயன்படுத்தும் போது அரச மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் அமைதியை பேண வேண்டும். இவையே ஜனநாயக நாடுகளுக்குள் செயல்படுத்தப்பட வேண்டிய சித்தாந்தங்கள் ஆகும்.

இது தொடர்பில் ஜனாதிபதி நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கொள்கின்றோம். ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்தை தூய்மைப்படுத்தி மீண்டும் கையளிக்க உள்ளதாக அவர்கள் அறிவித்திருந்தமையை நாமும் அறிவோம் ; அரசாங்கமும் அறியும். 

அவ்வாறிருந்தும்  இராணுவத்தினர் ஊடாக எதற்காக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகின்றோம். வன்முறையாகவும் மிலேச்சதனமான துன்புறுத்தும் வகையிலும் செயல்பட முயற்சிக்க வேண்டாம் என்று மீண்டும் வலியுறுத்துகின்றோம்.  இவற்றுக்கு எதிராக பல லட்சக்ணக்கான மக்களை ஒன்று திரட்டி வீதிக்கு இறங்கி ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதை தனியார்மயப்படுத்தல் என...

2022-12-08 16:33:06
news-image

ஜனாதிபதி விரும்பினால் அமைச்சரவையில் மாற்றம் -...

2022-12-08 16:30:49
news-image

கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார் வேலுகுமார் -...

2022-12-08 22:00:49
news-image

பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவிப்பு 

2022-12-08 21:38:21
news-image

தமிழ் அரசியல் கைதிகளை ஒரே தடவையில்...

2022-12-08 15:23:26
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது சிறந்த...

2022-12-08 14:58:05
news-image

ஊழல் மோசடி முடிவுக்கு வரும் வரை...

2022-12-08 18:39:48
news-image

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்கள் தெரிவு பெரும்பான்மை...

2022-12-08 18:41:55
news-image

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவை கலைத்துவிட வேண்டும் -...

2022-12-08 13:39:41
news-image

6 கோடி ரூபா பெறுமதியான தேங்காய்...

2022-12-08 18:38:26
news-image

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2022-12-08 19:04:07
news-image

மக்களுக்கு கஷ்டமாக இருந்தாலும் மின் கட்டணத்தை...

2022-12-08 18:17:53