முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை இயல்பாகவே இழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் புதிய கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரது உறுப்புரிமை இயல்பாகவே பறிக்கப்படும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.