12 மணிநேரத்துக்குள் தடுப்பூசி அவசியம்

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:14 PM
image

6 கேள்வி - பதில்கள் 

1. எந்தக் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு?

பொதுவாக, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அதிலும் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைந்த குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எச்.ஐ.வி., தொற்றால் பாதித்த குழந்தைகளும் அப்படித்தான்.

2. குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகள்?

பி.சி.ஜி., காசநோய், நிமோனியா, ப்ளு காய்ச்சல், அம்மைத் தடுப்பூசி, ஹெப்படைட்டிஸ் ஏ மற்றும் பி, வைரஸ் மூளைக்காய்ச்சல் போன்ற தடுப்பூசிகள் போடலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரவேண்டியது அவசியம்.

3.புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடலாமா?

எல்லா தடுப்பூசிகளையும் போடவேண்டியது முக்கியம். கதிர்வீச்சு சிகிச்சையின் போது, நுண்ணுயிர்த் தடுப்பூசிகளை போடக் கூடாது. சிகிச்சைக்குப் பின் வீரியம் குறைந்த தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம்.

4. எடை குறைந்த குழந்தைகளுக்கு பிரத்தியேக தடுப்பூசிகள் உள்ளதா?

குழந்தை 2 கிலோவுக்கு மேல் இருந்தால், எல்லா தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ளலாம். 2 கிலோவுக்கு குறைவாக இருந்தால், ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசியை ஒரு மாதம் கழித்துப் போடலாம்.

5. தாய்க்கு ஹெப்படைட்டிஸ் பி பாதிப்பு இருந்தால், குழந்தைக்கு தடுப்பூசி அவசியமா?

குழந்தையின் எடை 2 கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட வேண்டும்.

6. கர்ப்ப காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள்?

அம்மை தடுப்பூசிகளை போடக்கூடாது. கர்ப்பிணிகளுக்கு ஹெப்படைட்டிஸ் பி மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான தடுப்பூசிகள் போட வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right