பயங்கரவாதிகள் இரசாயன ஆயுதங்களை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தியா எச்சரிக்கை

By Digital Desk 5

22 Jul, 2022 | 05:35 PM
image

(ஏ.என்.ஐ)

சிரியாவில் 'இரசாயன ஆயுதங்கள்' அச்சுறுத்தல் குறித்து ஐ.நா பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி  பிரதிக் மாத்தூர், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இரசாயன ஆயுதங்களை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக எச்சரிப்பு விடுத்தார்.

இந்த பிராந்தியம் உட்பட, பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இரசாயன ஆயுதங்களை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக இந்தியா மீண்டும்; எச்சரிப்பதாக குறிப்பிட்டார்.

நிலுவையில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க சிரியாவிற்கும் இரசாயன ஆயுதத் தடைக்கான அமைப்புக்கும் தொழில்நுட்பச் செயலகத்துக்கும் இடையே தொடர்ச்சியான ஈடுபாட்டை இந்தியா ஊக்குவிக்கிறது என்று அவர் கூறினார்.

2018 ஆம் ஆண்டில், இராசாயன ஆயத தடைக்கான அமைப்பின் தொழில்நுட்ப செயலகம் சிரிய அரபுக் குடியரசில் இரசாயன ஆயுதத் தாக்குதல்களை நடத்தியவர்களை விசாரணை செய்து அடையாளம் காண்பது உள்ளிட்ட புதிய பொறுப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

யாரும், எங்கும், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு இந்தியா எதிரானது. இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான எந்தவொரு விசாரணையும் பாரபட்சமற்றதாகவும், நம்பகத்தன்மையுடனும், புறநிலையாகவும் இருக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடத்தி கொலைசெய்யப்பட்டு முதலைக்கு இரையான வயோதிப...

2022-10-07 10:30:14
news-image

பிரித்தானியாவில் மின்வெட்டு

2022-10-07 10:44:24
news-image

வளர்ப்பு மகனின் விதைகளை நீக்க முயன்ற...

2022-10-07 10:48:22
news-image

தாய்லாந்தில் முன்பள்ளி குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில்...

2022-10-06 15:38:43
news-image

மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு : மேயர் உள்பட...

2022-10-06 14:01:44
news-image

காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு ;...

2022-10-06 15:36:32
news-image

பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற தேசியக்...

2022-10-06 13:27:45
news-image

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக...

2022-10-06 12:55:32
news-image

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இணைந்த...

2022-10-06 13:27:19
news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57