பயணத்தை மையப்படுத்திய 'பேப்பர் ராக்கெட்' முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:38 PM
image

'விக்ரம்' பட புகழ் நடிகர் காளிதாஸ் ஜெயராம், 'நெஞ்சுக்கு நீதி' பட புகழ் நடிகை தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருக்கும் 'பேப்பர் ராக்கெட்' எனும் வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியானது. இதனை 'மாநாடு' புகழ் நடிகர் சிலம்பரசன் வெளியிட்டார்.

'வணக்கம் சென்னை', 'காளி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைதள தொடர் 'பேப்பர் ராக்கெட்'.

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் ஜூலை 29 ஆம் திகதி முதல் வெளியாகவிருக்கும் இந்த வலைதள தொடரில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், கருணாகரன், நிர்மல் பலாலி, டாக்டர் ராஜ், நாகி நீடு, சின்னி ஜெயந்த், காளி வெங்கட், ஜி. எம். குமார், அபிஷேக் நடிகைகள் தான்யா ரவிச்சந்திரன், கௌரி கிஷன், ரேணுகா, பூர்ணிமா பாக்கியராஜ், பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு தரன் குமார் இசை அமைத்திருக்கிறார். பின்னணி இசையை சிமோன் கே. கிங் வழங்கி இருக்கிறார்.

பயணத்தை மையப்படுத்திய இந்த வலைதள தொடரை ரைஸ் ஈஸ்ட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரித்திருக்கிறார். இந்தத் தொடரின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் சிலம்பரசன், விஜய் அண்டனி, இயக்குநர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.

இந்த தொடரைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கொரோனா காலகட்டத்தில் வாழ்க்கையைப் பற்றிய புரிதல் அனைவருக்கும் வெவ்வேறு வகையில் ஏற்பட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் அனைவரும் பயணத்தை குறித்து அதிகமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

இதனை மையப்படுத்தி 'பேப்பர் ராக்கெட்' எனும் வலைதள தொடரின் திரைக்கதையை எழுதினேன். மன காயங்களுக்கும், மன அழுத்தத்திற்கும் விடையாகவும், பல புரியாத புதிர்களுக்கு பதிலாகவும் பயணங்கள் அமைகிறது.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெவ்வேறு வயதினர் ஒன்று கூடி பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். அதன் போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவங்களை 'பேப்பர் ராக்கெட்' விவரிக்கிறது'' என்றார்.

'பேப்பர் ராக்கெட்' எனும் வலைதள தொடரின் முன்னோட்டத்தில் காட்சிகளும், அதன் கோணங்களும் பார்வையாளர்களை ரசிக்க வைக்கிறது.

இதனால் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் 29 ஆம் திகதி முதல் வெளியாகும் இந்த தொடருக்கு தற்போதே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய கார்த்தியின் 'சர்தார் 2'

2024-07-13 18:57:21
news-image

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' டீசர் வெளியீடு

2024-07-13 18:58:37
news-image

மணிரத்னம் வெளியிட்ட ஹன்சிகா மோத்வானியின் 'காந்தாரி'...

2024-07-13 18:28:20
news-image

நயன்தாரா நடிப்பில் தயாராகும் 'மூக்குத்தி அம்மன்...

2024-07-13 18:24:20
news-image

இயக்குநர் அட்லி வெளியிட்ட 'மிஸ்டர் ஹவுஸ்...

2024-07-13 18:21:04
news-image

டீன்ஸ் - விமர்சனம்

2024-07-13 16:01:34
news-image

டட்டூவை மையப்படுத்தி தயாராகும் 'லவ் இங்க்'

2024-07-13 11:08:19
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்...

2024-07-13 10:51:25
news-image

இந்தியன் 2 - விமர்சனம்

2024-07-13 09:50:54
news-image

அர்ஜுன் தாஸுடன் முதன்முறையாக இணையும் அதிதி...

2024-07-11 21:59:09
news-image

சாவுக்கு துணிஞ்சவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை'...

2024-07-11 18:07:30
news-image

இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்ட 'வீராயி...

2024-07-11 17:54:39