ரயில் கட்டணத்தை அதிகரித்து மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்க முடியாது - ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 05:11 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கை ரயில்வே திணைக்களத்தினது வருமானத்தை அதிகரிப்பதற்கு பல வழிகள் காணப்பட்டாலும் ரயில் பயணக் கட்டணத்தை  மாத்திரம் அதிகரித்து ‍பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத  சோமரட்ண தெரிவித்தார்.

ரயில்வே போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை காணப்பட்டாலும், போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள வீதத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

போக்குவரத்து மற்றும் பொதிகள் சேவைகள் கட்டண திருத்தம் குறித்து பொது மக்களுக்கு தெரிவிப்பதற்கான போதிய கால அவகாசம் இல்லை என்பதுடன், ரயில்வே நிலையங்களில் கணக்குப் பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு ஒரு நாள் போதாது.ஆகவே, எதிர்வரும் முதலாம்  திகதி முதல் புதிய ரயில் போக்குவரத்து கட்டணத்தை அமுல்படுத்துவது சிறப்பாக இருக்கும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் போக்குவரத்து கட்டணம் திருத்தப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 21 ஆம் திகதியன்று அமைச்சர் பந்துல குணவர்தனவால் வெளியிடப்பட்டிருந்து.

இந்நிலையிலேயே, கட்டண திருத்தம் குறித்து பயணிகளுக்கு தெரிவிக்க போதிய கால அவகாசம் இல்லை என்றும் , ரயில் நிலைய கணக்குப் பதிவுகளை மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் குறிப்பிட்டு ரயில் நிலைய அதிபர் சங்கத்தினர் இலங்கை ரயில்வே திணைக்கள பொது முகாமையாளருக்கு எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26