சீனாவின் புகழ்­பெற்ற ஜோதிட குரங்கு அமெ­ரிக்க அதிபர் தேர்­தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என ஆரூடம் கூறி­யுள்­ளது. சீனாவில் உள்ள ஜீடா எனும் குரங்கு தீர்க்கதரி­ச­னத்தின் அரசன் என அழைக்­கப்­ப­டு­கி­றது. அப்­படி அழைக்­கப்­ப­டு­வ­தற்கு ஏற்­ற­வாறே பல்­வேறு உலக நிகழ்­வு­களை தனது ஞான திருஷ்­டியால் முன்­கூட்­டியே கணித்து வெற்­றியும் பெற்­றுள்­ளது இந்த குரங்கு.

ஐரோப்­பிய கால்­பந்து தொடரில் போர்த்துக்கல்தான் வெற்றி பெறும் என முன்­கூட்­டியே கணித்­ததால் பிர­ப­ல­ம­டைந்த இந்த குரங்­குக்கு சீனா மட்­டு­மின்றி உல­க­ள­விலும் ஏரா­ள­மான ரசி­கர்கள் உள்­ளனர்.

இந்­நி­லையில் தற்­போது உல­கமே ஆவ­லோடு எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்கும் அமெ­ரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து இந்த குரங்கு ஜோதிடம் கூறி­யுள்­ளது.

அமெ­ரிக்க ஜனாதிபதித் தேர்தல் குறித்து கணிப்­ப­தற்­காக  பிரத்­தி­யேக மேடை அமைத்து நிகழ்ச்சி ஏற்­பாட்­டா­ளர்கள் அதன் ஒரு புறத்தில் ட்ரம்பின் உரு­வ­பொம்­மை­யையும் மற்­றொ­ரு­புறம் ஹிலா­ரியின் உருவ பொம்­மை­யையும் வைத்­தனர்.  இதைத்­தொ­டர்ந்து   ஜோதி­டக்­கு­ரங்கு மேடையில் ஏறி­யது. பின்னர் ஒரு கணம் கூட யோசிக்­காமல் ட்ரம்பின் பொம்­மையை கட்­டிப்­பி­டித்து முத்­த­மிட்டு தேர்வு செய்­தது. குரங்கின் கணிப்­புப்­படி அமெ­ரிக்க ஜனாதிபதித் தேர்­தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர போவது ட்ரம்ப் என்று  குரங்கின் ஜோதிடக்  கணிப்பு கூறுகின்றது.