டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் அமலா பாலின் 'கடாவர்'

Published By: Digital Desk 5

22 Jul, 2022 | 11:55 AM
image

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைத்திருக்கிறார். 

படத்தைப் பற்றி அமலா பேசுகையில்,“ கொலை வழக்கு ஒன்று, பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் தடயவியல் சாட்சி ஒன்றின் மூலம் அடையாளம் காணப்படுகிறார். அதன் பின் என்ன நடைபெறுகிறது? என்பது தான் கடாவர் படத்தின் பரபர திரைக்கதை.” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயன்தாரா - சுந்தர். சி கூட்டணியில்...

2024-09-17 15:35:04
news-image

இசை வெளியீட்டு விழாவை கலகலப்பாக்கிய விஜய்...

2024-09-17 15:20:48
news-image

சத்யராஜ் நடிக்கும் 'ஜீப்ரா' படத்தின் மோஷன்...

2024-09-17 15:20:18
news-image

பெண்களின் பாரம்பரிய ஆடையை பற்றி பேசும்...

2024-09-17 13:59:28
news-image

ஜனநாயகத்திற்கான ஜோதியை ஏந்தி வரும் விஜய்

2024-09-17 13:35:40
news-image

அரசியலில் அறிமுகமாகும் தளபதி விஜய்க்கு குட்டிக்கதை...

2024-09-17 11:12:46
news-image

'கார்த்தி 29' அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

2024-09-17 10:55:46
news-image

சீமான் வெளியிட்ட 'நந்தன்' திரைப்படத்தின் இசை,...

2024-09-14 17:58:39
news-image

புலனாய்வு விசாரணை வகையில் உருவாகியிருக்கும் 'சட்டம்...

2024-09-14 18:00:08
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட...

2024-09-14 17:25:54
news-image

டொவிணோ தோமஸ் நடிக்கும் ஏ ஆர்...

2024-09-14 12:57:13
news-image

பிரபு - வெற்றி கூட்டணி அமைத்து...

2024-09-14 10:59:08