40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று (22) இரவு நாட்டை வந்தடையும் என வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிச் சென்ற கப்பல் நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய எரிபொருள் பாஸ் QR முறை ஜூலை 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 21 முதல் 24 வரை கொழும்பில் பல இடங்களில் QR குறியீடு பரிசோதனை செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடும் ஆரம்பமானது.
வலு சக்தி அமைச்சின் அறிவித்தலுக்கமைய வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கம் 0,1 மற்றும் 2 என்ற எண்ணிகளாக இருப்பின் அந்த வாகனங்களுக்கு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் , 3,4, மற்றும் 5 ஆகிய எண்களாக இருப்பின் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் , 6,7,8 மற்றும் 9 ஆகிய எண்களாக இருப்பின் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM