செந்நிற தலைமுடி கொண்டவர்களுக்கு பிரித்தானிய திரையரங்கிற்குள் நுழைய விசேட சலுகை

Published By: Vishnu

22 Jul, 2022 | 11:43 AM
image

பிரித்­தா­னிய திரை­ய­ரங்க நிறு­வ­ன­மொன்று, செந்­நிற தலை­முடி கொண்­ட­வர்கள் திரைப்­படம் பார்ப்­ப­தற்­காக இல­வச அனு­ம­திச்­சீட்டு வழங்­கு­வ­தாக இவ்­வாரம் அறி­வித்­தது. 

செந்­நிற தலை­முடி கொண்­ட­வர்கள் கடும் வெப்­பத்­தி­லி­ருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக இத்­திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தாக ஷோகேஸ் சினிமா எனும் நிறு­வனம் அறி­வித்­தது.

பிரிட்­டனில் இவ்­வாரம் முன்­னெப்­போதும் இல்­லா­த­ள­வுக்கு வெப்­ப­நிலை அதி­க­ரித்­தது. சில இடங்­களில் சுமார் பாகை செல்­சியஸ் வெப்­ப­நிலை நில­வி­யது. 

செந்­நிற தலை­முடி மற்றும் வெள்ளை தோல் கொண்­ட­வர்கள் கடும் வெப்­பத்­தினால் தோல் புற்­றுநோய் அச்­சு­றுத்­தலை அதிகம் எதிர்­கொள்­வ­தாக முந்­தைய ஆய்­வுகள் தெரி­வித்­தி­ருந்­தன.

இந்­நி­லையில், கடும் வெப்­பத்­தினால் அதிகம் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக கரு­தப்­படும் செந்­நிற தலை­முடி கொண்­ட­வர்கள், ஜுலை 18, 19 ஆம் திக­தி­களில் தமது குளி­ரூட்­டப்­பட்ட திரை­ய­ரங்­கு­க­ளுக்குள் இருந்தது திரைப்படம் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குவதாக மேற்படி நிறுவனம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்