எல்லோருடைய எதிர்பார்ப்பின் படி எந்த தடங்கலுமின்றி தீபாவளியன்று வெளியானது தல அஜித்தின் வேதாளம்.

அதே போல் எதிர்பார்த்ததைப் போலவே முதல் நாள் வசூலில் சாதனை புரிந்தது. ஏறத்தாழ 16 கோடியை தொட்டது. இரண்டாவது நாளான நேற்றும் வசூல் ஏறுமுகமாகி 25 கோடியைத் தொட்டது. மழையின் குறுக்கீடு இருந்தாலும் இரசிகர்களின் ஆதரவால் உலகமெங்கும் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது வேதாளம். இதே நிலையில் போனால் முதல் வாரத்திலேயே படத்தின் வசூல் நூறு கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். அஜித்தின் ஆசையும் அது தானாம்.
திரை விமர்சகர்களிடம் கலவையான விமர்சனத்தைப் பெற்று வந்தாலும், ரசிகர்களுக்கு வேதாளம் பிடித்திருக்கிறது என்பது தான் இந்த வசூல் காட்டும் நிதர்சனம்.  
தகவல் : சென்னை அலுவலகம்