இலங்கையில் உணவு பாதுகாப்பற்ற நிலையில் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் - உலக உணவு திட்டம் அறிக்கை

By T. Saranya

21 Jul, 2022 | 04:48 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளனர். நெருக்கடி நிலைமை ஏற்படும் பொது இந்த நிலைமை மேலும் அதிகரிக்கும் என்று உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளது.  

இலங்கையின் உணவு பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

6.7 மில்லியன் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவு வகைகளை உட்கொள்வதில்லை. விவசாயிகளுக்கு விதைகள், உரம் மற்றும் நிதியுதவி கிடைக்கப் பெறாவிட்டால், வரவிருக்கும் பெரும்போகத்தில் நெற் செய்கை 50 சதவீதமாகக் குறைவடையும் அபாயம் உள்ளது. அத்தோடு மீன்பிடி மற்றும் கால்நடைத் துறைகளுக்கு மீளமுடியாத நிலைமை ஏற்படும்.

தேசிய ரீதியில் 6.3 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி உள்ளனர். இது நூற்றுக்கு 28.3 சதவீதமாகும். இவர்களில் ஆகக் குறைந்தது 65 600 பேர் கடுமையான உணவு பாதுகாப்பின்றியுள்ளனர். இந்த புள்ளி விபரங்கள் கடுமையாக அதிகரிக்கக் கூடும்.

வானளாவிய ரீதியிலான உணவுச் செலவுகள் மக்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை கடினமாக்குகின்றன. சுமார் 6.7 மில்லியன் மக்கள் போதுமான உணவை உட்கொள்வதில்லை மற்றும் 5.3 மில்லியன் மக்கள் உண்ணும் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களில் வருமானம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஐந்தில் இரண்டு குடும்பங்கள் தங்கள் வருமானம் பாதியாகக் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க, 5 மில்லியன் மக்கள் நெருக்கடி அல்லது அவசரகால வாழ்வாதாரத்தை சமாளிக்கும் உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். 

இது வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான அவர்களின் நடுத்தர மற்றும் நீண்ட காலத் திறனை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31