நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யக் கூடும் எனவும் அத்துடன் குறித்த பிரதேசங்களில் காற்றின் வேகமானது சில நேரம் சற்று அதிகரித்து வீசக் கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் வேண்டுக்கோள் விடுத்துள்ளது.