தமிழ் சினிமாவின் நவீன காதல் இளவரசனாக வலம் வரும் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மூன்று நடிகைகள் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் சி. எஸ். கார்த்திகேயன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகனாக 'டிஜிட்டல் யுக காதல் இளவரசன்' அசோக் செல்வன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இளம் நடிகைகள் மேகா ஆகாஷ், சாந்தினி சவுத்ரி மற்றும் கார்த்திகா முரளிதரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபல யூட்யூபர் அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெறும் காதலை மையப்படுத்திய இந்த திரைப்படத்திற்கு எம் பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் ஆகிய மூவர் ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''பாடசாலை பருவம், கல்லூரி பருவம் மற்றும் கல்லூரியில் படித்து முடித்த பிறகு வேலை தேடும் பருவம் என மூன்று காலகட்டத்தில் நடைபெறும் காதலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. நவீன கால காதலாக இல்லாமல், நேர்த்தியான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகிறது."' என்றார்.
'ஓ மை கடவுளே', 'மன்மத லீலை', 'வேழம்' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வனின் வணிக மதிப்பு உயர்ந்திருப்பதால், பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் அறிவிப்பு , அவரது ரசிகர்களை போல் திரையுலக வணிகர்களையும் உற்சாகமடைய செய்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM