98 வயதில் பல்­க­லைக்­க­ழக பட்டம் பெற்ற முதி­யவர்

Published By: Vishnu

21 Jul, 2022 | 02:45 PM
image

இத்­தா­லியைச் சேர்ந்த முதி­யவர் ஒருவர் 98 வயதில் பல்­க­லைக்­க­ழக பட்டம் பெற்­றுள்ளார். 

ஜோசப்பி பட்­டேர்னோ எனும் இவர் இத்­தா­லியில் மிக அதிக வயதில் பல்­க­லைக்­க­ழக பட்டம் பெற்­ற­வ­ராக விளங்­கு­கிறார்.

இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் இள­மாணி பட்டம் பெற்ற அவர், அண்­மையில் இத்­தா­லியின் பலேர்மோ பல்­க­லைக்­க­ழ­கத்தில் வர­லாறு மற்றும் தத்­து­வ­வி­யலில்  முது­மாணி பட்­டத்தைப் பெற்­றுக்­கொண்டார்.

இத்­தா­லியின் சிசிலி தீவில் 1923 ஆம் ஆண்டு பிறந்­தவர் ஜோசப்பி பட்­டேர்னோ. 

குடும்­பத்தின் வறுமை கார­ண­மாக, ஆரம்பக் கல்­வியை மாத்­தி­ரமே அவரால் பெற முடிந்­தது. 

பின்னர் கடற்­படை சிப்­பா­யாக இணைந்து 2 ஆம் உலக யுத்­தத்தில் போரா­டினார். அதன்பின் ரயில்வே துறையில் அவர் பணி­யாற்ற இணைந்தார்.

31 வயதில் தான் அவர் பாட­சாலைக் கல்­வியை பூர்த்தி செய்தார். 

முது­மை­யிலும்  கல்வி மீது கடும் ஆர்வம் கொண்­டி­ருந்த பட்­டேர்னோ, சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியை தொடர ஆரம்பித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்