5 தட­வைகள் இரட்டைக் குழந்­தை­களைப் பெற்ற பெண்ணை வீட்­டி­லி­ருந்து வெளி­யேற்­றிய கணவன்

Published By: Vishnu

21 Jul, 2022 | 02:37 PM
image

உகண்­டாவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 5 தட­வைகள் இரட்டைக் குழந்­தை­களைப் பெற்­றதால், அப்­பெண்­ணையும் பிள்­ளை­க­ளையும் அவரின் கணவர் வீட்­டை­விட்டு வெளி­யேற்­றி­யுள்ளார்.

நலங்கோ குளோ­ரியா எனும் இப்பெண், ஸலலோங் என்­பவர் திரு­மணம் செய்­தி­ருந்தார். இத்­தம்­ப­தி­யி­ன­ருக்கு ஏற்­கெ­னவே 8 பிள்­ளைகள் பிறந்­தி­ருந்­தனர். இப்­பிள்­ளைகள் அனை­வரும் 5 தட­வை­களில் இரட்டைக் குழந்­தை­க­ளாகப் பிறந்­த­வர்கள். 

அண்­மையில் இத்­தம்­ப­திக்கு மீண்டும் இரட்டைக் குழந்­தைகள் பிறந்­தன. 

இவ்­வாறு 5 தட­வைகள் இரட்டைக் குழந்­தை­க­ளாக 10 பிள்­ளைகள் பிறந்த நிலையில், குளோ­ரி­யா­வையும் பிள்­ளை­க­ளையும் அப்­பெண்ணின் கணவர் ஸ்லோங்கோ வீட்டை விட்டு வெளி­யேற்­றி­யுள்ளார்.

'இது குறித்து தொலைக்­காட்­சி­யொன்­றிடம் குளோ­ரியா பேசு­கையில், 'நான் கர்ப்­பி­ணி­யாக இருந்­த­போது. ஏன்னை வீட்டை விட்டுச் செல்­லு­மாறு எனது கணவர் கூறினார். இக்­கு­ழந்­தை­களைப் பிர­ச­வித்­த­மைக்­காக நான் கவ­லை­ய­டை­ய­வில்லை. 

இக்­கு­ழந்­தை­களை அவர்­களின் தந்தை விரும்­ப­வில்லை என்­பது எனக்குத் தெரியும். அவரின் இடத்­தில் இக்­கு­ழந்­தை­களை நான் விட்­டுச்­செல்ல முடி­யாது. 

அனைத்து சவால்­க­ளுக்கும் மத்­தியில் எந்த பிள்ளையையும் நான் கைவிடவில்லை. அவர்களை இறைவன் பாதுகாப்பார் என்பது என்பதை நான் அறிவேன்' எனக் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்