தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

Published By: Digital Desk 3

21 Jul, 2022 | 09:00 AM
image

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று (20) மீன்பிடிக்க வந்த ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று புதன்கிழமை  காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு வந்தனர்.

மீனவர்கள் நேற்று நள்ளிரவு இலங்கை தலைமன்னாருக்கும்- நாச்சிகுடாவுக்கும்   இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு படகையும் அதில் இருந்த 11 மீனவர்களையும் கைது செய்தனர்.

இதில் ஒரு படகையும் அதிலிருந்து 5 மீனவர்களும் இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக மீனவர் தெரிவித்ததையடுத்து, படகை சோதனை செய்த இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறு உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகையும்  அதிலிருந்து 5 மீனவர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த பாலமுருகன், அந்தோணி, தங்கபாண்டி,  அஜித், கிருஷ்ணன், மடுகு பிச்சை ஆகிய ஆறு மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர்  தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

சிறைபிடிக்கப்பட்ட   ராமேஸ்வரம் மீனவர்களிடம்  இலங்கை கடற்படையினர்  நடத்திய  முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் 6 மீனவர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள்  மத்திய, மாநில அரசுகள் ஊடக இலங்கை அரசுக்கு  கோரிக்கை வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28